LATEST NEWS
“இது நம்ம லிஸ்ட்-லயே இல்லையே’… முதல் முறையாக இசையமைப்பாளராக களம் இறங்கிய இயக்குனர் மிஷ்கின்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மிஸ்கின். இவர் முதன்முதலில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார்.
தன்னுடைய தனித்துவமான இயக்கத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் முதல் முறையாக மிஸ்கின் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ள டேவில் என்ற திரைப்படத்தில் மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான கலவி என்ற பாடல் நேற்று வெளியானது.
இந்த பாடல் வெளியாகிய சில நிமிடங்களில் அருமையான மெலோடி பாடல் மூலம் இயக்குனர் மிஷ்கின் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் மிஸ்கின் இசைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
