26 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்ய வம்சம்… இரண்டாம் பாகம் அப்டேட் வெளியிட்ட நடிகர் சரத்குமார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

26 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்ய வம்சம்… இரண்டாம் பாகம் அப்டேட் வெளியிட்ட நடிகர் சரத்குமார்..!!

Published

on

கடந்த 1997 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சூரியவம்சம். இந்த திரைப்படம் மகன் மற்றும் தந்தை இடையேயான உறவை மையக் கருத்தாக கொண்டு அமைந்திருந்தது. இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும் ராதிகா, மணிவண்ணன், சுந்தர்ராஜன் மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் கலைத்துறை பயணத்தில் காலங்கள் கடந்தும் தொழில் வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும் கொண்டாட கூடிய சிறப்பு வாய்ந்த குடும்ப திரைப்படம் தான் சூரியவம்சம்.

Advertisement

இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும் சூர்ய வம்சம் 2 திரைப்படம் அப்டேட் குறித்தும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sarath Kumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@r_sarath_kumar)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in