மனைவியின் பிறந்தநாளுக்கு வேற லெவலில் கிஃப்ட் கொடுத்து அசத்தியா ஹரிஷ் கல்யாண்… அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவியின் பிறந்தநாளுக்கு வேற லெவலில் கிஃப்ட் கொடுத்து அசத்தியா ஹரிஷ் கல்யாண்… அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா..?

Published

on

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணியின் மகன்தான் ஹரிஷ் கல்யாண்.இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் நடிகை அமலாபாலும் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

Advertisement

இதனிடையே கடந்த வருடம் இறுதியில் சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பெற்றோர்களால் தனது நிச்சயிக்கப்பட்ட நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மனைவி நர்மதாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு ஒரு ஸ்பெஷலான கிப்ட் கொடுத்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இருவரும் குழந்தை பருவத்தில் சந்தித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது போன்ற ஒரு புகைப்படத்தை ஹரிஷ் கல்யாண் பரிசாக கொடுத்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in