“எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள், விட்டுடுங்க..” என கதறியும் 2 மணி நேர நரக சித்திரவதை செய்த கொடூர கும்பல்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள், விட்டுடுங்க..” என கதறியும் 2 மணி நேர நரக சித்திரவதை செய்த கொடூர கும்பல்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெறும் ரூ.20 தண்ணீர் பாட்டிலுக்காக சாய் குமார் என்ற குடும்பஸ்தரை நான்கு பேர் கொண்ட கும்பல் மின்கம்பத்தில் கட்டிவைத்து, இரண்டு மணி நேரம் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்த சாய் குமாருக்கு மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அக்டோபர் 18 நள்ளிரவில், விஜயவாடா படமடா பகுதியில் உள்ள ஒரு பான் கடையின் குளிர்சாதன பெட்டியிலிருந்து ரூ.20 தண்ணீர் பாட்டிலை சாய் குமார் எடுக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த பால்காரர் ஒருவர் அவரைப் பிடித்து கடை ஊழியரான ரவிசங்கரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து, ரவிசங்கர் மற்றும் அருகில் உள்ள மதுக்கடையில் பணிபுரியும் ஐயப்பசங்கர், பொட்டன்செட்டி நவீன், சாய் பிரணீத் ஆகிய நால்வரும் சேர்ந்து சாய் குமாரை ஒரு ஷெட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரது கைகளைக் பின்னால் கட்டி, மின் கம்பத்தில் பிணைத்து தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். “எனக்கு மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள், என்னை விட்டுவிடுங்கள்” என்று சாய் குமார் கதறி அழுதும், இரக்கமற்ற அந்தக் கும்பல் இரண்டு மணி நேரம் நரக வேதனை அளித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த விஜயவாடா காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகள் நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in