“இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட ‘அந்த’ 3 வார்த்தை..!” ஜாமீனில் வந்த ரவுடிக்கு மஞ்சுவிரட்டு திடலில் காத்திருந்த எமன்.. அதிரவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட ‘அந்த’ 3 வார்த்தை..!” ஜாமீனில் வந்த ரவுடிக்கு மஞ்சுவிரட்டு திடலில் காத்திருந்த எமன்.. அதிரவைக்கும் பின்னணி..!!

Published

on

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது ரவுடி சுள்ளான் மதன், மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது மர்ம கும்பலால் கரும்புத் தோட்டத்திற்குள் விரட்டி விரட்டி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ள மதன், சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 6 தனிப்படைகளை அமைத்த போலீசார், முதற்கட்டமாக பிரதீப், பாலமுருகன், பாபு ஆகிய மூன்று பேரைக் கைது செய்து விசாரித்த போது, இந்த கொலையின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஆரம்பத்தில், கடந்த 2024-ல் நடந்த இரட்டைக் கொலைக்கு பழிவாங்க இந்த கொலை நடந்ததாகக் கருதப்பட்ட நிலையில், போலீசாரின் அடுத்தகட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளியான மிதுன் மாணிக்கம் மற்றும் அவரது கூட்டாளிகளான முத்து சூர்யா, சந்தோஷ், விக்னேஷ் ஆகிய 4 பேர் சிக்கினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு சிவகங்கையில் வெட்டிக்கொல்லப்பட்ட ராஜேஷ் என்ற இளைஞரின் கொலைக்கு பழிவாங்கவே இந்த ஸ்கெட்ச் போடப்பட்டது தெரியவந்தது. ராஜேஷ் கொலையின் முக்கிய குற்றவாளியான அருண்பாண்டியன், சுள்ளான் மதனின் நெருங்கிய நண்பர் ஆவார். ராஜேஷ் கொல்லப்பட்ட போது, மதன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “முடிச்சிட்டோம் ல” எனப் பதிவிட்டதே இந்த பகைக்கு வித்திட்டுள்ளது.

Advertisement

இந்த இன்ஸ்டாகிராம் பதிவால் ஆத்திரமடைந்த ராஜேஷின் நண்பர் மிதுன் மாணிக்கத்திற்கும், சுள்ளான் மதனுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கடுமையான வாக்குவாதம் நீடித்து வந்துள்ளது. இந்த மோதலின் உச்சமாக, சுள்ளான் மதன், மிதுன் மாணிக்கத்தின் தாயார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் எல்லையற்ற ஆத்திரமடைந்த மிதுன் மாணிக்கம், சுள்ளான் மதனை தீர்த்துக்கட்ட சமயம் பார்த்துக் காத்திருந்துள்ளார். மதன் ஜாமீனில் வெளியே வந்ததை அறிந்தவுடன், தனது கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு மஞ்சுவிரட்டு திடலில் வைத்து இந்த கொடூரப் படுகொலையை அரங்கேற்றியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in