“2027-ல் தமிழ்நாடே அதிரப்போகும் ‘வெற்றி மாநாடு’…” எங்கு தெரியுமா CM விஜய் போடப்போகும் மெகா பிளான் இதுதான்.. தவெக தொண்டர்களுக்கு காத்திருக்கும் டபுள் தமாக்கா சர்ப்ரைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“2027-ல் தமிழ்நாடே அதிரப்போகும் ‘வெற்றி மாநாடு’…” எங்கு தெரியுமா CM விஜய் போடப்போகும் மெகா பிளான் இதுதான்.. தவெக தொண்டர்களுக்கு காத்திருக்கும் டபுள் தமாக்கா சர்ப்ரைஸ்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது மாநாட்டை திருச்சி அல்லது திருநெல்வேலியில் நடத்துவதற்குத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது, இடைத்தேர்தல் வெற்றி மற்றும் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை ஒன்றிணைத்து, இதனை ஒரு பிரம்மாண்ட முப்பெரும் விழாவாகக் கொண்டாடக் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்கு ‘வெற்றி மாநாடு’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தவெகவின் முதலாவது மாநாடு விக்கிரவாண்டியிலும், இரண்டாவது மாநாடு மதுரை மாநகரிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, தற்போது தென் தமிழகம் அல்லது மத்திய தமிழகத்தை இலக்காகக் கொண்டு இந்த மூன்றாவது மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in