LATEST NEWS
“முடிந்தால் தடுத்துப் பாருங்கள்..!” தமிழக அரசுக்கு சவால் விட்ட பிரகாஷ் ராஜ்.. கிளம்பிய புதிய சர்ச்சை..!!
பிரபல நடிகர் மற்றும் சமூக ஆர்வலரான பிரகாஷ் ராஜ், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான SIR-க்கு எதிரான போராட்டங்களுக்குத் தமிழ்நாட்டில் ஏன் அனுமதி அளிப்பதில்லை என்று முதலமைச்சர் விஜய்யிடம் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் பேசிய அவர், இந்த விவகாரம் வெறும் ஒரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட பிரச்சனையல்ல, மாறாக இது மக்களின் ஜனநாயகம் மற்றும் ஓட்டுரிமை சார்ந்த பொதுப் பிரச்சனை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், தமிழ்நாட்டில் SIR நடைமுறைக்கு எதிராகத் தான் நேரடியாகத் தெருவில் இறங்கிப் போராடப் போவதாகவும், முடிந்தால் தங்களைத் தடுத்துப் பார்க்குமாறும் அரசுக்குத் துணிச்சலாகச் சவால் விடுத்துள்ளார். முன்னதாக, ஜனநாயக மாண்புகளைக் காக்க வலியுறுத்தி டெல்லி, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் போன்ற பல்வேறு நகரங்களில் நடைபெற்ற மக்கள் மற்றும் இளைஞர் சார்ந்த அமைப்புகளின் போராட்டங்களில் அவர் முன்னின்று பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
