LATEST NEWS
அய்யய்யோ.. திடீரென மிரண்டு ஓடிய அம்பாரி யானை.. நடுரோட்டில் கார்கள், பைக்குகளை துவம்சம் செய்த கொடூரம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற ஜம்போ சவாரி திருவிழாவின் போது, அம்பாரி சுமந்து வந்த சோமன்னா என்ற யானை திடீரென மிரண்டு ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. சிவமொக்கா கோட்டை அரண்மனைக்கு அருகே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊர்வலத்தின் போது ஏற்பட்ட ஏதோ ஒரு சத்தத்தால் மிரட்சியடைந்த அந்த யானை, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாகன்களுக்குக் கட்டுப்படாமல் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது.
இவ்வாறு பயத்தில் மிரண்டு ஓடிய சோமன்னா யானை, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களைச் சேதப்படுத்தி அங்கிருந்த பொதுமக்களை அச்சுறுத்தியது. யானை மிரண்டு வாகனங்களைத் தாக்கும் இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. உடனடியாகச் செயல்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் பாகன்கள், கடும் போராட்டத்திற்குப் பிறகு யானையைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
