LATEST NEWS
“இறந்த வீட்டுல போய் சாப்பிடுறீங்களா..?” அப்போ இந்த கிராமத்தை பார்த்து கத்துக்கோங்க.. மக்கள் செய்த மனிதாபிமான காரியம்.. நெட்டிசன்களை உருகவைத்த சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம், ஒட்டுமொத்த தேசத்தின் இதயங்களையும் வென்று சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. நம் சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக யாராவது இறந்துவிட்டால், அந்தத் துக்க வீட்டிலேயே 13-ம் நாள் காரியம் அல்லது திதி என்ற பெயரில் ஊருக்கே விருந்து வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால், இந்த கிராமத்து மக்கள் அந்தத் துயரமான நேரத்தில் சாப்பிடுவதற்காக அங்கே செல்வதில்லை; மாறாக, பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு தங்களால் இயன்ற 100, 200 அல்லது 500 ரூபாய் எனப் பண உதவி வழங்கி அவர்களின் சுமையைக் குறைக்க ஒன்று கூடுகிறார்கள்.
துக்க வீட்டை நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளுவதை விட, அந்தப் பேரிழப்பால் தவிக்கும் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்பதே மனிதநேயம் என்பதை இக்கிராம மக்கள் நிரூபித்துள்ளனர். இத்தகைய மனிதாபிமானமிக்க வழக்கம் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் பரவினால், ஏழைக் குடும்பங்கள் போலி கவுரவத்திற்காகவும், சடங்குகளுக்காகவும் கடன் வலையில் சிக்குவதிலிருந்து முற்றிலும் காப்பாற்றப்படுவார்கள் என்பது நிதர்சனம்.
