CRIME
ரயில் தண்டவாளத்தில் கிடந்த கணவரின் உடல்… 2 மாதங்களுக்குப் பின் ‘கால் ரெக்கார்டு’ காட்டிய மெகா ட்விஸ்ட்.. அம்பலமான மனைவியின் கொடூர முகம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், 15 ஆண்டுகள் தம்பதியராக வாழ்ந்த சுமன் ஜா (36) என்ற ஆட்டோ ஓட்டுநரை, அவரது மனைவி அஞ்சனி தேவி (29) மற்றும் அவரது கள்ளக்காதலன் முகமது ரியாசுல் (30) ஆகியோர் இணைந்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அஞ்சனி தேவிக்கும் பக்கத்து வீட்டுக்காரரான ரியாசுலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவகாரம் கணவர் சுமன் ஜாவுக்குத் தெரியவரவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுமன் ஜாவைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த இருவரும், அவருக்கு மது ஊற்றிக் கொடுத்து மயக்கமடையச் செய்து, தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் கொலையை விபத்து போலக் காட்டுவதற்காக, சுமன் ஜாவின் உடலை மேவ்லா மகாராஜ்பூர் பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுமன் ஜாவின் சகோதரர் சன்னிக்கு அஞ்சனியின் கள்ளத்தொடர்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்த போலீசார், அஞ்சனி தேவி மற்றும் முகமது ரியாசுல் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கு சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன.
