உச்சகட்ட கொடூரம்..! 2 பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொன்று.. காப்பாற்ற வந்த சொந்த சகோதரிக்கும் தாக்குதல்… தாய் செய்த கொடூரமான முடிவு.. நடந்தது என்ன..? – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட கொடூரம்..! 2 பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொன்று.. காப்பாற்ற வந்த சொந்த சகோதரிக்கும் தாக்குதல்… தாய் செய்த கொடூரமான முடிவு.. நடந்தது என்ன..?

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் கேட்லி பகுதியில், உஷா (28) என்ற பெண் தனது 3 வயது மகள் ரித்திகா மற்றும் 4 வயது மகன் முகுல் ஆகிய இரு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். குழந்தைகளின் சத்தம் கேட்டு அவர்களைக் காப்பாற்ற ஓடிவந்த உஷாவின் சொந்த சகோதரியான மனிஷாவையும் அவர் தாக்கிப் படுகாயப்படுத்தியுள்ளார். அதன் பிறகு, உஷா தனக்குத்தானே கடுமையான காயங்களை ஏற்படுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், உஷாவும் அவரது இரு குழந்தைகளும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். படுகாயமடைந்த அவரது சகோதரி மனிஷாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உஷாவும் மனிஷாவும் சொந்த சகோதரிகள் ஆவர், இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் இரு சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நடந்த போது இவர்களின் கணவர்கள் வேலை விஷயமாக வெளியூரில் இருந்தனர், மற்ற குடும்ப உறுப்பினர்களும் வீட்டில் இல்லை.

Advertisement

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கேட்லி காவல்துறையினர், சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட உஷா கடுமையான மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த விபரீத முடிவிற்கான துல்லியமான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், சிகிச்சையில் இருக்கும் சகோதரி மனிஷா குணமடைந்து வாக்குமூலம் அளித்த பிறகே முழு உண்மையும் வெளிவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in