CRIME
“வெளிப்புறக் காயங்கள் இல்லை… ஆனா…” துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 19 பேர் துடிதுடித்துப் பலி… பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த நெஞ்சை உலுக்கும் உண்மை..!!
கொல்கத்தா சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். கொட்டும் மழையில் திடீரென முக்தாராம் பாபு தெருவில் உள்ள பந்தலில் பெருங்கூட்டம் கூடியதே இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்தது. கல்கத்தா மற்றும் என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, இந்த மரணங்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல், நெரிசலால் ஏற்பட்ட மார்புக் காயங்கள் மற்றும் மூளையில் ஏற்பட்ட உள் இரத்தக் கசிவுடன் கூடிய கடுமையான தலைக் காயங்களே முதன்மைக் காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக, நெரிசலின் போது மார்பில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் வெளிப்புற காயங்கள் ஏதுமின்றி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். மேலும், சிலருக்கு விலா எலும்புகள் முறிந்து நுரையீரலுக்குள் ஊடுருவி உயிருக்கு ஆபத்தான உள் காயங்களை ஏற்படுத்தியதும், கீழே விழுந்ததால் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களும் மரணத்தை விளைவித்துள்ளன. இந்த சம்பவத்தில் காயமடைந்த 45 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக இருந்ததாக பூஜை ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ள மாநில அரசு, இந்த விபத்து குறித்து தீவிர விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
