“அமைச்சர் நிர்மல் குமாருக்கு மனநலப் பரிசோதனை செய்யணும்..!” ஆளுநருக்கு இன்பதுரை அனுப்பிய ஷாக்கிங் கோரிக்கை.. அதிரும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமைச்சர் நிர்மல் குமாருக்கு மனநலப் பரிசோதனை செய்யணும்..!” ஆளுநருக்கு இன்பதுரை அனுப்பிய ஷாக்கிங் கோரிக்கை.. அதிரும் அரசியல் களம்..!!

Published

on

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை, தமிழகத்தின் தற்போதைய த.வெ.க. அரசையும், அதன் முதலமைச்சர் விஜய்யையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். த.வெ.க. அரசு தற்போது கொண்டுவந்துள்ள மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த உலகப் புகழ்பெற்ற திட்டம் என்றும், அத்திட்டத்தில் ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அ.தி.மு.க.வின் திட்டங்களைத் த.வெ.க. அரசு திருடி செயல்படுத்துவதாகவும், தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சொல்லாமல் யாரும் ஆட்சி நடத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலின் போது அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க.விற்குச் சென்றவர்கள் உட்பட பலருக்குத் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியதை, ‘முகமது பின் துக்ளக்’ திரைப்படக் காட்சியோடு ஒப்பிட்டு அவர் கேலி செய்துள்ளார்.

தொடர்ந்து பேசிய இன்பதுரை, அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பேசி வரும் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது கிரிமினல் வழக்கு தொடர ஆளுநரின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அ.தி.மு.க சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் அமைச்சர் நிர்மல் குமார் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதை ஆளுநர் உரிய மருத்துவரைக்கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சாடியுள்ளார். கடந்த காலங்களில் அ.தி.மு.க.வில் இருந்தபோது செந்தில் பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கில் நிர்மல் குமார் மன்னிப்பு கேட்டதை, அவவருக்கு அப்போது வழக்கறிஞராக இருந்த

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in