“அடக்கடவுளே.. போலீஸ் ஸ்டேஷனில் 3 நாட்கள் நடந்த கொடூரம்…” வீட்டிற்கு வந்த 1 மணி நேரத்தில் இளைஞர் செய்த பயங்கர காரியம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கடவுளே.. போலீஸ் ஸ்டேஷனில் 3 நாட்கள் நடந்த கொடூரம்…” வீட்டிற்கு வந்த 1 மணி நேரத்தில் இளைஞர் செய்த பயங்கர காரியம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், 20 வயதான சுர்ஜித் சிங் என்ற வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 13 வயது சிறுமியை, சுர்ஜித் சிங் கடத்திச் சென்றுவிட்டதாக அச்சிறுமியின் தந்தை ராமாவதார் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில், காவல்துறையினர் கடந்த 3 நாட்களாக சுர்ஜித்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் சுர்ஜித்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த சுர்ஜித், கடந்த வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். வீட்டிற்கு வந்த அவர் உணவு சாப்பிட்டுவிட்டு மேல் மாடி அறைக்குச் சென்ற நிலையில், இரவு 8 மணியளவில் தூக்கிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காவல்துறையினரின் கொடூரமான சித்திரவதை அல்லது சிறுமியின் தந்தை விடுத்த மிரட்டலே தனது மகனின் தற்கொலைக்குக் காரணம் என சுர்ஜித்தின் தந்தை கங்காராம் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அவரது புகாரின் பேரில் சிறுமியின் தந்தை ராமாவதார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in