அய்யோ கொடுமையே..! திடீரென திருப்பியதால் நேர்ந்த பேரழிவு… பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய கார்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியான குடும்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே..! திடீரென திருப்பியதால் நேர்ந்த பேரழிவு… பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய கார்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியான குடும்பம்..!!

Published

on

மகாராஷ்டிராவின், பீட் மாவட்டத்தில் நேற்று காலை அரசுப்பேருந்து மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

சாலையில் இருந்த பள்ளங்களைத் தவிர்ப்பதற்காகத் திடீரெனத் திரும்பிய கார், பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில், 11 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் ஓம்கார் மகாதேவ் கிரி, கஜனன் மகாதேவ் நம்தாஸ், அவரது மகன் சமர்த், சோம்நாத் படே மற்றும் அனில் ஆச்சார்யா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

ஒழுங்கற்ற சாலைகளால்தான் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்படுவதாக கூறி, சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினரும் அதிகாரிகளும் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சரிசெய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in