LATEST NEWS
‘தெய்வம் தந்த பூவே’ சீரியல் நடிகருக்கு நடந்து முடிந்தது திருமணம்… வைரலாகும் wedding clicks…
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று தெய்வம் தந்த பூவே. இத்தொடர் 2021ல் தொடங்கப்பட்டது. தெய்வம் தந்த பூவே தெலுங்கில் வெளியான மித்ரம் தொடரின் ரீமேக்காகும். இது சீரியல் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த டிவி சீரியலில் நிஷ்மா செங்கப்பா, ஸ்ரீநிதி மற்றும் அம்ருத் கலாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஸ்ரீதர் சுப்ரமணியம், ஹர்ஷா நாயர், நான்சி, காயத்ரி பிரியா, முரளி கிரிஷ், பொரளி திலீபன், வி.ஜே.சந்தியா, உமா மகேஸ்வரி, சந்தியா ராமச்சந்திரன், சைலு இம்ரான், அஜய் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் தொடரை பிரதாப் மணி எழுதி இயக்குகிறார்.
தற்பொழுது இத்தொடரில் நடித்த நடிகர் அஜய் தனது நீண்ட நாள் தோழியை மனைவியாக கரம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர் அஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனது நீண்ட நாள் தோழியை இருவீட்டார் சம்மதத்துடன் மனைவியாக கரம் பிடித்த அஜய்க்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அவர்களின் திருமண வீடியோ…
View this post on Instagram