LATEST NEWS
பாக்க ஹீரோயின் போல இருக்கும் நடிகர் அசோக் செல்வனின் தங்கையை பாத்துருக்கீங்களா?… முதன்முறையாக வெளியான புகைப்படம்….

‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் அசோக் செல்வன்.
கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் செல்வன் தான். 2022-ம் ஆண்டில் மட்டும் இவர் ஹீரோவாக நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்களை கொண்ட படமாகும்.
தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. குறிப்பாக பா.இரஞ்சித் தயாரிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் அசோக். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் அவருடன் சாந்தனுவும் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர ‘நெஞ்சமெல்லாம் காதல்’ என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார் அசோக் செல்வன்.
நடிகர் அசோக் செல்வனுக்கு தற்பொழுது 33 வயதாகிறது. இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவ்வப்பொழுது இவரது திருமணம் குறித்த வதந்திகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் மணமுடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி படங்களில் பிசியாக, முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ள நடிகர் அசோக் செல்வனுக்கு ஒரு தங்கை உள்ளார்.இது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது நடிகர் அசோக் செல்வனின் சகோதரியின் புகைப்படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.