தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் நவீன். இவர் காவிரி,மாலை முரசு மற்றும் ஜெயா டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய கண்மணி என்பவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நவீன்.
இவர் கண்ட நாள் முதல் என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இதனிடையே கடந்த வருடம் ஜூன் மாதம் கண்மணி மற்றும் நவீன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கண்மணி சேகர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தம்பதியினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இதை சர்ப்ரைசாக வைத்திருக்க வேண்டும் என நினைத்தோம்.
சலூனில் எடுத்த வீடியோவை பதிவிடும்போது இதை சிறிதும் நாங்க கவனிக்கல. மண்டையில் உள்ள கொண்டையை மறந்தது போல ஆகிவிட்டது. இதைப் பார்த்து பலரும் எங்க கிட்ட கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இதனால் அனைவரிடமும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறி கர்ப்பத்தை அவர்கள் அறிவித்துள்ளனர். தற்போது இந்த தம்பதிக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் .
Instagram இல் இந்த இடுகையைக் காண்க