CINEMA
“ரோபோ சங்கர் தாத்தா ஆகப்போகிறார்” மகள் இந்திரஜா சொன்ன மகிழ்ச்சி செய்தி…!!!
தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர்கள் ஒருவர் ரோபோ சங்கரும் ஒருவர். இவர் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்துள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் தற்போது ஜொலித்து வருகிறார். இவருக்கு இந்திரஜா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர் தன்னுடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்களிடம் நடுவர் ராதா எப்பொழுது மகிழ்ச்சி செய்தியை எங்களுக்கு சொல்லப் போகிறீர்கள்? என்று இருவரிடம் கேட்க, அதற்கு இந்திரஜாவின் கணவர் கார்த்திக், நாங்கள் இருவரும் அப்பா,அம்மா ஆக போகிறோம் என்று கூறி தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளார்.