CINEMA
“கங்குவா” படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது…? வெளியான நியூஸ்…. ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்…!!!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம் .இந்த படத்தையடுத்து தற்போது கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா 7 வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இந்த படம் சுமார் 300 இருந்து 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டியில், கங்குவா படத்தின் இயக்குனர் சிவா பிறந்தநாள் அன்று அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளிவர உள்ளதாக கூறியுள்ளார்.