CINEMA
இப்போ தெரியுதா…? சூர்யாவிடம் அஜித் சொன்ன அந்த வார்த்தை….!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்த படமானது நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனையடுத்து இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேளைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூர்யா, சமீபத்தில் அஜித்தை சந்தித்த பொழுது, “இப்போது தெரியுதா நான் ஏன் சிவாவை விடவில்லை என்று” கூறியதாக தெரிவித்துள்ளார். சிவா – அஜித் கூட்டணியில் 4 படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.