CINEMA
KGF-3 எடுப்பது உறுதி…. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகர் யாஷ்…!!
KGF மூன்றாம் பாகம் நிச்சயமாக எடுக்கப்படும் என்று நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். KGF படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் எடுக்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவியது.
இந்நிலையில் இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் யாஷிடம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், சரியான நேரம் வருகையில் பிரமாண்டமாக எடுக்கப்படும் என கூறியுள்ளார்.