தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் தமிழில் போடா போடு என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இறுதியாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சமந்தா மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் ஏகே 62 திரைப்படத்தை இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இழந்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் விக்னேஷ் சிவனை அஜித் வேண்டாம் என்று கூறியதாக பல சர்ச்சைகளும் எழுந்த நிலையில் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை போட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.