நடுக்கடலில் ஷாலினி உடன் செம ரொமான்டிக் போஸ் கொடுத்த அஜித்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடுக்கடலில் ஷாலினி உடன் செம ரொமான்டிக் போஸ் கொடுத்த அஜித்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்.

இவரின் திரைப்படம் ஏதாவது வெளியாகிறது என்றால் ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்வது வழக்கம்.

Advertisement

அதனைப் போலவே இவரின் திரைப்படங்கள் குறித்த எந்த தகவல் மற்றும் அவரின் புகைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் அதனை இணையத்தில் அதிக அளவு வைரல் ஆக்கி வருவார்கள்.

சமீபத்தில் அஜித் நடித்த வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது.

துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் திடீரென விலகினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மயில் திருமேனி இயக்க உள்ளார்.

Advertisement

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை இப்படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் தாமதமாகி வருவது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித்தின் மனைவி ஷாலினி யாரும் எதிர்பாராத விதமாக சில அல்டிமேட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை ஷாலினி வெளியிட்டு இருந்தார்.

Advertisement

அதனை தொடர்ந்து தற்போது அஜித்துடன் போட்டியில் எடுத்துக்கொண்ட ஹாட் ரொமான்டிக் புகைப்படங்களை ஷாலினி வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற கவுன் அணிந்து ஷாலினி ஹாலிவுட் ஹீரோயினி போல உள்ளார். அதனைப் போலவே அஜித்தும் பச்சை நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற கூலிங் கிளாஸ் உடன் செம்ம ஸ்டைல் ஆக உள்ளார்.

Advertisement

இந்த புகைப்படங்களை தற்போது அவரை ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவு பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in