CINEMA
“வேட்டையன்” படத்தில் அமிதாப் பச்சனின் AI குரல்…. வெளியான புதிய அப்டேட்…!!
வேட்டையன்’ படத்தில் அமிதாப் பச்சனின் AI குரல் பயன்படுத்தப்படவுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன் ‘சத்யதேவ்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவில் அவருடைய குரலுக்குப் பதிலாக நடிகர் பிரகாஷ் ராஜின் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இது ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனால் AI மூலம் அமிதாப்பின் குரல் பதிவு செய்யப்பட்டு, அக்.10இல் படம் வெளிவரவுள்ளது.