“வெடிகுண்டு இருக்கு” கழிவறையில் மிரட்டல் கடிதம்… நடுவானில் பறக்கவிருந்த சென்னை விமானத்தில் வெடிகுண்டு பீதி.. 176 பயணிகள் அவசரமாக இறக்கம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வெடிகுண்டு இருக்கு” கழிவறையில் மிரட்டல் கடிதம்… நடுவானில் பறக்கவிருந்த சென்னை விமானத்தில் வெடிகுண்டு பீதி.. 176 பயணிகள் அவசரமாக இறக்கம்..!!!

Published

on

சென்னை மீனபாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு கோவா புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை 5.40 மணிக்கு 176 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் 6E588 என்ற இண்டிகோ விமானம் கோவா நோக்கிப் புறப்படவிருந்தது. அந்த நேரத்தில், விமானத்தில் இருந்த கழிவறையில் “விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என எழுதப்பட்டிருந்த ஒரு காகிதத்தை விமானப் பணிப்பெண்கள் கண்டெடுத்தனர். இது குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, அந்த இண்டிகோ விமானம் உடனடியாக விமான நிலையத்தின் பாதுகாப்பான தனிப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், மாலை 6.55 மணிக்குள் விமானத்தில் இருந்த 176 பயணிகளும் அவசர அவசரமாகக் கீழே இறக்கிவிடப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியாளர்களும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

விமானம் முழுவதிலும் நடத்தப்பட்ட இந்த அதிரடித் தேடுதல் வேட்டையின் முடிவில், அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படாததால், அது ஒரு போலி மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, சுமார் ஐந்து மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு, நள்ளிரவு 10.30 மணியளவில் பயணிகள் அனைவரும் மீண்டும் அதே விமானத்தில் ஏற்றப்பட்டு கோவாவிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in