LATEST NEWS
“நல்ல நேரம் முடியறதுக்குள்ள போகணும்…” லெஹங்கா உடையில் கரடுமுரடான மலையில் நடந்த மணப்பெண்.. முதலமைச்சருக்கு கண்ணீருடன் கோரிக்கை..!!
உத்தரகாண்டில் பாரதிய ஜனதா கட்சியின் மிகப்பரிய வளர்ச்சி உரிமைகோரல்களுக்கு இடையே, அங்குள்ள கிராமப்புற நிலவரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சக்ரதாவில் உள்ள உடவா என்ற கிராமத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், ஷர்மிளா என்ற மணப்பெண் தனது திருமண நாளில் 18 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
புல்ஹார் கிராமத்தில் இருந்து புறப்பட்ட திருமண ஊர்வலம், லோகண்டி வரை வாகனத்தில் வந்தது. ஆனால், அங்கிருந்து மணமகனின் வீட்டிற்குச் செல்லும் வழி கரடுமுரடான மலைப் பாதையாக இருந்ததால், மணப்பெண் ஷர்மிளா தனது கனமான லெஹங்கா ஆடையுடன் கரடுமுரடான பாதையில் கால்நடையாகவே தனது பயணத்தைத் தொடர்ந்தார். கிரகப்பிரவேச சடங்கிற்கான நல்ல நேரம் முடிவதற்குள் வீட்டைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக அவர் இந்த சவாலான பயணத்தை மேற்கொண்டார்.
https://www.instagram.com/reel/De1-doeE89J/?utm_source=ig_web_button_share_sheet
இந்த சிரமத்திற்குப் பிறகு, ஷர்மிளா ஒரு வீடியோவைப் பதிவு செய்து உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு நேரடியாகக் கோரிக்கை வைத்துள்ளார். அதில், “ஐயா, எங்கள் கிராமத்திற்கு உடனடியாகச் சாலை வசதி செய்து தாருங்கள்; அப்போதுதான் எதிர்காலத்தில் வேறு எந்தப் பெண்ணோ அல்லது கிராம மக்களோ இதுபோன்ற அவதியையும் கஷ்டத்தையும் சந்திக்காமல் இருப்பார்கள்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
