CINEMA
மாலை 5 மணிக்கு ரெடியா இருங்க…. அழைப்பிதழை வெளியிட்ட “பிரதர்” படக்குழு..!!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் பிரதர். இந்த நிலையில் “மெதக்குது காலு ரெண்டும்” என்ற பாடலிற்கான அழைப்பிதழை ‘பிரதர்’ படக்குழுவானது வெளியிட்டுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “மக்காமிஷி” பாடல் ஹிட்டான நிலையில், இரண்டாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று பத்திரிகை வடிவில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.