CINEMA
நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு…. இன்று காலை 11.11 மணிக்கு சர்பிரைஸ் இருக்கு…!!
நடிகர் ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜூனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.
ஸ்கிரீன் சீன் மீடியா இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று பட குழு அறிவித்தது. இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு படக்குழு இன்று காலை 11. 11 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.