LATEST NEWS
செம குஷி தான் போங்க..! இனி இவர்களுக்கும் பேருந்து பயணம் முற்றிலும் இலவசம்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை…!!
முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் அண்மைய அதிரடி நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதேவேளையில், மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ் டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவசப் பயணம் வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களது பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த அதிரடிச் சலுகை அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் தற்பொழுது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாக நலன் கருதி தென்காசி, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் உட்பட 19 ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பாக, நேர்மையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் மாற்றப்பட்டதன் பின்னணி குறித்து தற்பொழுது பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த அதிரடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
