LATEST NEWS
மாற்றுத்திறனாளிகளுக்கு அடித்தது ஜாக்பாட்..! ரூ.4 கோடியில் ஸ்கூட்டர், இ-பைக் வழங்க முதலமைச்சர் விஜய் அதிரடி அரசாணை..!!
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது இ-பைக் வழங்கத் தமிழக அரசு ரூ.4 கோடி மதிப்பீட்டில் அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் போக்குவரத்து வசதியையும் சுயசார்பையும் மேம்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் விஜய் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 400 தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த இருசக்கர வாகனங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நலத்திட்டம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, அவர்கள் எவ்வித சிரமமுமின்றித் தங்களின் அன்றாடப் பயணங்களை மேற்கொள்வதற்கும், சமூகத்தில் தனித்து இயங்குவதற்கும் பெரும் உதவியாக இருக்கும் எனப் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
