LATEST NEWS
“இங்க பாருங்க அதிசயத்தை.. ” லாரியின் அடியில் நசுங்கிய ஸ்கூட்டர்.. எமனையே எட்டி உதைத்த இளம் பெண் செய்த மிரளவைக்கும் காரியம்.. நெட்டிசன்களை உறையவைத்த வைரல் வீடியோ..!!
மஹாராஷ்டிர மாநிலம் அஹில்யாநகரின் ஸ்ரீராம்பூர் பகுதியில், மணல் ஏற்றி வந்த கனரக டம்பர் லாரி ஒன்று ஸ்கூட்டரை நசுக்கிய கோர விபத்தில், இளம் பெண் ஒருவர் தனது அசாத்திய புத்திசாலித்தனத்தால் நூலிழையில் உயிர் தப்பிய மிரள வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தப் பெண் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஒரு மணல் லாரி அவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் ஸ்கூட்டர் லாரியின் அடியில் சிக்கி முழுமையாக நசுங்கியது. மரணம் மிக அருகில் வந்த அந்த நொடியில், அப்பெண் துளியும் பதற்றமடையாமல் சாதுரியமாகச் செயல்பட்டார்.
நொடிப் பொழுதில் தனது அசாத்தியமான சமயோசித புத்தியையும் தைரியத்தையும் வெளிப்படுத்திய அந்தப் பெண், தன்னை நோக்கி வந்த லாரியின் முன்பக்க பம்பரை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தொங்கினார். லாரியின் அடியில் சக்கரங்களில் சிக்கி உடல் நசுங்குவதிலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்ட அவரது இந்த அசாத்திய தற்காப்பு வேகம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் மரணத்தின் பிடியிலிருந்து கம்பீரமாக உயிர் தப்பிய இந்த இளம் பெண்ணின் வீரச் செயல் மற்றும் நெஞ்சை உரையவைக்கும் இந்த விபத்து வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலத்த பாராட்டுகளுடன் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
