“ஆட்டோவில் வந்த எமன்.. பின்னால் வந்த ஸ்கூட்டருக்கு நேர்ந்த கொடூரம்.. சம்பவ இடத்தில் துடிதுடித்த வாலிபர்.. நெஞ்சை உரையவைக்கும் சிசிடிவி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆட்டோவில் வந்த எமன்.. பின்னால் வந்த ஸ்கூட்டருக்கு நேர்ந்த கொடூரம்.. சம்பவ இடத்தில் துடிதுடித்த வாலிபர்.. நெஞ்சை உரையவைக்கும் சிசிடிவி வீடியோ..!!

Published

on

ஹைதராபாத் பாலநகர் பகுதியில், இரும்புக்குழாய்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவிலிருந்து திடீரென குழாய்கள் சரிந்து பின்னால் வந்த ஸ்கூட்டர் மீது விழுந்ததில், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலநகர் பிரதான சாலையில் இரும்புக்குழாய்களை ஆபத்தான முறையில் அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வேகமாகச் சென்றுள்ளது. அப்போது அந்த ஆட்டோவின் பின்னால் வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆட்டோவில் கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாய்கள் அனைத்தும் மொத்தமாகச் சரிந்து அந்த வாலிபர் மீது பயங்கரமாக விழுந்துள்ளன.

இந்தக் கொடூர விபத்தில் இரும்புக்குழாய்களின் பலத்த எடையில் நசுங்கிய அந்த வாலிபர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விபத்து நடந்த உடனே ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். இக்கோர விபத்தின் நேரடி சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் சோகத்தையும், பொதுச் சாலைகளில் இத்தகைய கனரகப் பொருட்களைப் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராகவும் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து பாலநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in