CRIME
“அடப்பாவமே.. தார் காருக்கே இந்த நிலைமையா..?” ஸ்கூட்டரில் வந்து ஸ்கெட்ச் போட்ட பலே திருடன்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ஹைதராபாத்தின் அக்பர் பாக் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் காரின் மாற்று டயர் திருடப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் முழுவதும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்தச் சிசிடிவி காட்சிகளின்படி, ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த தார் காரின் பின்புறம் சென்றுள்ளார். யாரும் பார்க்காத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, காரில் பொருத்தப்பட்டிருந்த மாற்று டயரை மிகவும் லாவகமாகக் கழற்றியுள்ளார். பின்னர், அந்தப் பிரம்மாண்ட டயரைத் தனது ஸ்கூட்டரிலேயே வைத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் வழக்குப்பதிவு செய்துள்ள ஹைதராபாத் போலீசார், சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் அந்த ஸ்கூட்டர் திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
