LATEST NEWS
திடீரென விபத்தில் சிக்கிய CWC பவித்ரா… இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?… அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி. அதனைத் தொடர்ந்து இவர் நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இணையத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
அதே சமயம் பல திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் மறுபக்கம் போட்டோ சூட் நடத்திய தினம் தோறும் புதுவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் பவித்ரா சமீபத்தில் ஒரு சிறிய விபத்தில் சிக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஒரு பதிவை பகிர்ந்து உள்ள நிலையில் அதில், ஒரு சிறிய விபத்தில் சிக்கியதாகவும் பெரிய அடி எதுவும் இல்லை மூன்று வாரங்கள் ஆகிவிட்டது தற்போது இந்த விபத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் புதிய புகைப்படங்களை எடுக்க முடியவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ள பவித்ரா தற்போது ஒரு புகைப்படத்தை போட்டு விரைவில் மீண்டும் வருவேன் என கூறியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க