“குடும்பத்தில் முதல் பட்டதாரி”… பட்டம் பெற்ற மகளின் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்டுப்புறப் பாடகர் அந்தோணி தாசன்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குடும்பத்தில் முதல் பட்டதாரி”… பட்டம் பெற்ற மகளின் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்டுப்புறப் பாடகர் அந்தோணி தாசன்..!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான பாடகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அந்தோணி தாஸ். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே பாடல்கள் மீது தீராத காதல் கொண்டதால் நாட்டுப்புறப் பாடகராக உருமாறினார்.

அது மட்டுமல்லாமல் தற்போது வரை பல கச்சேரிகளையும் செய்து வருகிறார். தெருக்கூத்து நிகழ்ச்சிகளிலும் இவர் பாடியுள்ளார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

Advertisement

இவரின் திறமைகளை தெரிந்து கொண்ட இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இவரின் பாடலுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தார்.

முதல் முதலில் அந்தோணி தாஸ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படத்தில் காசு பணம் துட்டு துளி மணி என்ற பாடலை பாடியிருந்தார்.

Advertisement

அந்தப் பாடல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாண்டியநாடு மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் குத்தாட்ட பாடல்களை பாடினார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதே சமயம் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்ற ரசிகர்களை கவர்ந்தார்.

Advertisement

இந்நிலையில் இவர் குடும்பத்தில் முதல் முதலாக இவரின் மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கான்வென்ட் காலேஜ் என்று கல்வி சாலைகள் காணாத என் வாழ்வில் என் மகள் படிக்க பட்டம் பெற்றதில் பேரானந்தம் எங்களுக்கு கடவுளுக்கு நன்றி என புகைப்படங்களை பகிர்ந்து அந்தோணி தாஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வர பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in