LATEST NEWS
“வெறும் கார் இல்ல… பல வருஷ உழைப்பு..!” புனேயில் நெஞ்சளவு வெள்ளத்திலும் காரை விடாமல் போராடிய உரிமையாளர்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அண்மையில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அந்த வீடியோவில், நெஞ்சு அளவு ஆழமுள்ள வெள்ள நீரில் நின்றுகொண்டிருக்கும் ஒரு நபர், தண்ணீரில் மிதந்து மூழ்கும் நிலையில் இருக்கும் தனது டாடா நெக்ஸான் இவி காரை விட்டுவிடாமல், அதன் பின்பகுதியைத் பலமாகப் பிடித்துக் கொண்டு நிற்பது போன்ற உணர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வெள்ளத்தின் பலத்த நீரோட்டத்தில் கார் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்காகவும், அது முற்றிலும் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காகவும் அந்த நபர் தனது சொந்த பாதுகாப்பைக் கூடப் பொருட்படுத்தாமல் காரைப் பிடித்துக் கொண்டு போராடினார். சற்று நேரத்தில் அங்கு வந்த ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கார் மெதுவாக வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. கார் பாதுகாப்பாக வெளியே இழுக்கப்படும் வரை, அந்த வெள்ள நீரிலேயே நின்றுகொண்டு காரை வழிநடத்தி அவர் காப்பற்றினார்.
https://www.instagram.com/reel/DafcAlGoAxH/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ இணையத்தில் பலரது பாராட்டுகளையும், அனுதாபத்தையும் பெற்று வருகிறது. சாதாரண மக்களுக்கு ஒரு கார் என்பது வெறும் போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல, அது பல வருட உழைப்பு, சேமிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான கனவுகளின் அடையாளம் என்பதை இந்த வீடியோ வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “சொந்தக்காரருக்கு மட்டும்தான் அதன் மதிப்பு தெரியும், இது வெறும் கார் அல்ல, பல வருட கடின உழைப்பு” என்று காரின் உரிமையாளரின் அர்ப்பணிப்பைப் பாராட்டி இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
