“அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா?.. அவரும் கூத்தாடிதான்”.. உதயநிதி ஸ்டாலினை மேடையிலேயே வறுத்தெடுத்த த.வெ.க லயோலா மணி..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா?.. அவரும் கூத்தாடிதான்”.. உதயநிதி ஸ்டாலினை மேடையிலேயே வறுத்தெடுத்த த.வெ.க லயோலா மணி..!!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் பொதுக்கூட்டமும் பனையூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி, பல கட்சிகளின் கூட்டணிகளை எதிர்த்து ஒற்றைத் தலைவனாக நின்று அண்ணன் விஜய் வென்று காட்டியுள்ளதாகப் பெருமிதம் கொண்டார். மேலும், சட்டமன்றத்தில் ‘பார்ட்டி ஃபண்ட்’ குறித்த கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் உதயநிதி ஸ்டாலின் ஓடிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், விஜய்யை சினிமாக்காரர் என்று விமர்சிக்கும் உதயநிதி ஒன்றும் சுதந்திரப் போராட்ட தியாகி அல்ல, அவரும் ஒரு பாடலுக்கு நடனமாடிய சினிமாக்காரர் தான் என்றும், தமிழ்நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் விஜய் மட்டும்தான் என்றும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஒன்றிய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த லயோலா மணி, அதிமுக மீது சவாரி செய்துகொண்டு மதவாதம் மற்றும் பாசிச வடிவில் தமிழக மக்களைப் பிரிக்க நினைக்கும் பாஜகவைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே முன்களப் பணியாளர் முதலமைச்சர் விஜய் மட்டும்தான் என்று குறிப்பிட்டார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் தவெக ஒரு மேயரை வெற்றி பெற வைத்தால் மீசையை எடுத்துக் கொள்வதாகச் சவால் விடுத்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளையும் தவெக கைப்பற்றும் என்றும், அவர் மீசையோடு இருக்க வேண்டுமா இல்லையா என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் சவால் விடுத்தார். அத்துடன், அடுத்த 10 ஆண்டுகளுக்கு விஜய்யே முதலமைச்சராக நீடிப்பார் என்றும், அதன்பின் பாரத பிரதமராக அவர் உயர்வார் என்றும் லயோலா மணி தனது உரையில் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in