“அய்யய்யோ காப்பாத்துங்க…” 15 நிமிடம் லிப்ட்டுக்குள் கதறிய இளைஞர்…! உணவு கொடுக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யய்யோ காப்பாத்துங்க…” 15 நிமிடம் லிப்ட்டுக்குள் கதறிய இளைஞர்…! உணவு கொடுக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்..!!

Published

on

உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ‘மகாசுன் மைவுட்ஸ்’ சொசைட்டியில் லிப்ட் பழுது காரணமாக டெலிவரி பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு டெலிவரி கொடுக்கச் சென்ற ஷியாம் என்ற இளைஞர், லிப்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 15 நிமிடங்கள் அதிலேயே மாட்டிக்கொண்டார். லிப்ட் பாதியில் நின்றதும், அதிலிருந்து வெளியே வர அவர் கதவை திறக்க முயன்றபோது, ​​திடீரென லிப்ட் வேகமாக கீழே சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

உடனடியாக அங்கிருந்தவர்கள் லிப்ட் கதவை திறந்து அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஷியாமின் காலில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், காயம் தீவிரமாக இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து காலில் ராடு பொருத்தியுள்ளனர். இதற்கிடையில், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஷியாமின் குடும்பத்தினர் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பெரும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், பில்டர் மற்றும் சொசைட்டி நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.

Advertisement

இந்த விபத்து அப்பகுதியில் உள்ள உயர் ரக அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. சொசைட்டியின் ஏஓஏ தலைவர் அணில் வர்மாவின் கூற்றுப்படி, லிப்ட் பராமரிப்பு குறித்து முன்பே புகார் தெரிவிக்கப்பட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சரியான நேரத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் வந்திருந்தால் இந்த விபட்டைத் தவிர்த்திருக்கலாம் என குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து லிப்ட்களையும் பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in