CSK-வில் எனக்கு வாய்ப்பு வேண்டும்… யோகி பாபுவுக்கு பதில் கொடுத்த தோனி… வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

CSK-வில் எனக்கு வாய்ப்பு வேண்டும்… யோகி பாபுவுக்கு பதில் கொடுத்த தோனி… வைரல் வீடியோ..!!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக LGM என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் தோனி அவரின் மனைவி சாக்ஷி தோனியுடன் பங்கேற்றார். மேலும் பட குழுவினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதனை நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு தோனியிடம் வேடிக்கையாக கேட்டார். இதற்கு பதில் அளித்த தோனி, ராயுடு ஓய்வு பெற்றுவிட்டார்.

Advertisement

அதனால் சிஎஸ்கே அணியில் உங்களுக்கான இடம் உள்ளது. நான் கட்டாயம் அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். நீங்கள் படத்தில் நன்றாக நடித்து வருகிறீர்கள் நீங்கள் கன்சிஷ்டியுடன் விளையாட வேண்டும். உங்களை காயப்படுத்தும் வகையில் பந்துவீச்சாளர் பந்தை வேகமாக வீசுவார் என தோனி கலகலப்பாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in