இயக்குனர் To விவசாயி…. சினிமாவில் மட்டுமல்ல விவசாயத்திலும் கலக்கும் இயக்குனர் வெற்றிமாறன்…. சில புகைப்படங்கள் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் To விவசாயி…. சினிமாவில் மட்டுமல்ல விவசாயத்திலும் கலக்கும் இயக்குனர் வெற்றிமாறன்…. சில புகைப்படங்கள் இதோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன்.

இவர் முதலில் இயக்கிய திரைப்படமான பொல்லாதவன் திரைப்படம் நடப்பு நிலைக்கு மிக அருமையாக படம் பிடித்து காட்டியதற்கு மிகுந்த பாராட்டுகளை பெற்றது.

Advertisement

அடுத்ததாக இவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளை பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகள் கிடைத்தன.

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் தொடங்கிய அசுரன் வரை அடுத்தடுத்த தொடர் வெற்றிகளை வழங்கியுள்ளார்.

Advertisement

இவரின் பெயரிலேயே வெற்றி இருப்பதாலோ என்னவோ தொடர் வெற்றியை சந்தித்து வருகின்றார்.

திரை உலகில் இவரின் அசுர வளர்ச்சியை கண்ட வியக்காத ஆட்களை கிடையாது. இப்படி தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் அவரின் சினிமா வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

Advertisement

ஆனால் சூட்டிங்கில் படு பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் விவசாயம் செய்து வருகின்றார்.

அதற்காக வேடந்தாங்கல் அருகே உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் 9 ஏக்கர் நிலம் வாங்கி பசுமை பண்ணை அமைத்துள்ளார்.

Advertisement

சூட்டிங் இல்லாத சமயங்களில் அங்கு செல்லும் வெற்றிமாறன் அங்கு நடக்கும் விவசாய பணிகளை மேற்பார்வை செய்வதோடு தானும் சில வேலைகளை செய்கிறார்.

வேடந்தாங்களுக்கு வரும் பறவைகளும், பறவைகளுக்காக தீபாவளி கொண்டாட்டத்தை தியாகம் செய்யும் மக்களின் மனசும் தான் அந்த ஊரில் நிலம் வாங்கியதற்கு காரணம் என வெற்றிமாறன் பலமுறை கூறியுள்ளார்.

Advertisement

இவர் விவசாயத்திற்கு மட்டுமல்ல விரைவில் அங்கேயே வீடு கட்டி செட்டிலாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவில் வெற்றி பெற்ற நீங்கள் விவசாயத்திற்கு வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தற்போது விவசாயம் செய்யும் வெற்றிமாறனின் சில புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in