LATEST NEWS
இந்திய அளவில் டாப் 10 நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!
இந்நிலையில் இந்திய அளவில் கடந்த ஆறு மாதங்களில் சில பான் இந்தியா படங்கள் வெளிவந்துள்ளது. அதாவது புஷ்பா, ஆர் ஆர் ஆர், பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 உள்ளிட்ட பல திரைப்படங்கள் தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
இதனால் தென்னிந்திய நடிகர்கள் கூட தற்போது இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டனர். தற்போது ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் இது தொடர்பாக ஒரு சர்வேவை எடுத்துள்ளது.
அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காளி உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள நடிகர்கள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வகையில் கலந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்காக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளில் தமிழ் நடிகரான இளைய தளபதி விஜய் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
அதே பட்டியலில் மற்றொரு தமிழ் நடிகரான அல்டிமேட் ஸ்டார் அஜித் டாப் 10 பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பான் இந்தியா ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபாஸ் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதில் இரண்டாவது இடத்தை ஜூனியர் என்டிஆர் பிடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து நான்காவது இடத்தை அல்லு அர்ஜுன் மற்றும் ஐந்தாவது இடத்தை அக்ஷய் குமார், ஏழாவது இடத்தை யஸ், எட்டாவது இடத்தை ராம்சரண் மற்றும் பத்தாவது இடத்தை மகேஷ் பாபு ஆகியோர் பிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ள விஜய் வெற்றியை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.
