“என்னைவிட அதிகமா சம்பாதிக்கிற, தார் கார் வாங்கித் கொடு” சலூன் அதிபர் மனைவியை நடுரோட்டில் முடியைப் பிடித்து இழுத்து உதைத்த கணவன்.. சிசிடிவி-யில் சிக்கிய கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னைவிட அதிகமா சம்பாதிக்கிற, தார் கார் வாங்கித் கொடு” சலூன் அதிபர் மனைவியை நடுரோட்டில் முடியைப் பிடித்து இழுத்து உதைத்த கணவன்.. சிசிடிவி-யில் சிக்கிய கொடூரம்..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வரதட்சணையாக தார் எஸ்யூவி கார் மற்றும் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் கேட்டு, சலூன் நடத்தி வரும் மனைவியை கணவன் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரிலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் ஜகத்புரி போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லூதியானாவின் ஜஸ்ஸியான் கிரீன் என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான ட்விங்கிள். சலூன் நடத்தி வரும் இவருக்கும், மருத்துவத் துறையில் பணிபுரியும் ரிதிஷ் சர்மா என்பவருக்கும் கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே, “நீ என்னை விட அதிகமாகச் சம்பாதிக்கிறாய், உன்னால் எனக்கு ஏன் தார் கார் வாங்கித் தர முடியாது?” எனக் கூறி ரிதிஷ் தன் மனைவியைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளார்.

Advertisement

சம்பவத்தன்று, தார் காருடன் சேர்த்து ஸ்போர்ட்ஸ் பைக்கும் கேட்டு ரிதிஷ் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் பயந்துபோன ட்விங்கிள் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அண்டை வீட்டாரை நோக்கி ஓடியபோது, துரத்திச் சென்ற கணவன் நடுரோட்டில் அவரது முடியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி, கால்களால் கொடூரமாக மிதித்துத் தாக்கியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை கணவனின் பிடியில் இருந்து மீட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in