“வீரவசனம் பேசுனா மட்டும் போதாது…” 20 ரூபாய் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு 41 ரூபாய்க்கு மின்சாரமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு EPS வைத்த கிடுக்கிப்பிடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வீரவசனம் பேசுனா மட்டும் போதாது…” 20 ரூபாய் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு 41 ரூபாய்க்கு மின்சாரமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு EPS வைத்த கிடுக்கிப்பிடி..!!

Published

on

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் கீழ் மின்சாரத்துறையில் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தில் நிலையற்ற ஆட்சி நடைபெற்று வருவதாகவும், பல இடங்களில் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைச் சரி செய்ய இந்த அரசு உரிய நடவடிக்கைகளையும், ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த காலங்களில் ஜெயலலிதா ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கி தடையில்லா மின்சாரம் வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.

2026-ல் பொறுப்பேற்ற இந்த அரசில், வீரவசனம் பேசும் நிர்மல் குமார் மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டினார். கடந்த ஆட்சிகளில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி ஊழல் செய்யப்பட்டதாகக் கூறி, ஒரு யூனிட் மின்சாரத்தை 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்துவந்த ஒப்பந்தத்தை அமைச்சர் ரத்து செய்தார். ஆனால், மாற்று வழியைக் கண்டறியாமல், வேண்டுமென்றே திட்டமிட்டு மின்பற்றாக்குறை இருப்பதுபோல செயற்கையான ஒரு பிம்பத்தை இந்த அரசு சித்தரித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, தற்போது யூனிட்டுக்கு முறையே 37 ரூபாய் 50 காசுக்கும், பின்னர் நவம்பர் முதல் 2027 மே வரை யூனிட்டுக்கு 41 ரூபாய் 50 காசுக்கும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தின் ஊழலுக்கு, துறை அமைச்சரும் முதலமைச்சரும் எதிர்காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று இபிஎஸ் எச்சரித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in