பிரபல தமிழ் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல தமிழ் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!!

Published

on

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் இ. ராமதாஸ். இவர் தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு,வாழ்க ஜனநாயகம் மற்றும் சுயம்வரம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. எழுத்தாளராக பல திரைப்படங்களில் பணியாற்றிய இவர் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்தார்.

இவர் விக்ரம் வேதா, யுத்தம் செய்,தர்மதுரை மற்றும் காக்கி சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இவர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனை அவரின் மகன் கலைச்செல்வன் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இவரின் இறுதி சடங்குகள் மாலை 5 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவுக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in