LATEST NEWS
பிக்பாஸில் வாங்கிய பணத்துடன்… 105 நாட்களுக்குப் பிறகு மகனை சந்தித்த அசீம்…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தனர். இவர்களில் அசீம் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.
விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய அசீம், சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில் அசீம் 15 நாட்களுக்குப் பிறகு தனது மகனை சந்தித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்ற பணத்துடன் தனது மகனை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
