பிக்பாஸ் பைனலிஸ்ட் அசீம், ஷிவின், விக்ரமன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் பைனலிஸ்ட் அசீம், ஷிவின், விக்ரமன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தனர். இவர்களில் அசீம் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.

இந்நிலையில் இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பைனலுக்குச் சென்ற விக்ரமன், அசீம், ஷிவின் ஆகியோரின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விக்ரமனுக்கு ஒரு நாளைக்கு 18,000 ரூபாய் என மொத்தம் 15 நாட்களுக்கு 18 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஷிவிணுக்கும் இதே சம்பளம் தான் வழங்கப்பட்டுள்ளது. அசீம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் என 15 நாட்களுக்கு 25 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in