தமிழ் சினிமாவில் பின்னணி பாடகையாக இருந்து பிறகு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இன்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் அரண்மனை 2, வடசென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் பாடியும் கச்சேரிகளில் கலந்து கொண்டும் இருக்கிறார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா எப்போதும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது ’துபாய் முதல் திண்டுக்கல் வரை… இந்த வாரம்’ என்று குறிப்பிட்டு அப்போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.