LATEST NEWS
BREAKING : ஜெம் வீரமணி வழக்கில் அவரது மேலாளர் கைது.. சற்றுமுன் அதிரடி..!!
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதான ஜெம் வீரமணிக்கு உதவியாக இருந்த அவரது மேலாளர் சக்திவேல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, சக்திவேல் மூலமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், வீரமணியின் பண்ணை வீட்டில் இருந்து முக்கியமான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும், சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
