“அதிர்ச்சி.. தமிழகத்திலேயே தயாராகும் ‘மெத்’ போதைப்பொருள்..?” 135 கிலோ பறிமுதல்.. சிக்கிய தவெக நிர்வாகி.. அதிர்ச்சியில் தமிழக அரசியல்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அதிர்ச்சி.. தமிழகத்திலேயே தயாராகும் ‘மெத்’ போதைப்பொருள்..?” 135 கிலோ பறிமுதல்.. சிக்கிய தவெக நிர்வாகி.. அதிர்ச்சியில் தமிழக அரசியல்..!!

Published

on

தமிழகத்திலேயே `மெத்’ எனப்படும் உயர்ரக போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளின் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் பகுதியில் உள்ள சுகநாதன் என்ற பைனான்சியர் வீட்டில், இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் தொடர் விசாரணையில், இந்த போதைப்பொருளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, தமிழகத்திலேயே அது தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு லேத் பட்டறையில் வைத்து இந்த மெத் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டதா அல்லது பெங்களூருவைச் சேர்ந்த கடத்தல் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் ராமநாதபுரம் லேத் பட்டறையில் போதைப்பொருள் தயாரித்ததாக 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையே கடல் வழியாகக் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயர்ரக மெத் போதைப்பொருளும் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் இருந்து சென்னை வழியாகக் கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள், தனுஷ்கோடி, நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி போன்ற கடலோரப் பகுதிகள் மூலமாக நடுக்கடலில் சர்வதேச கடத்தல்காரர்களுக்குக் கைமாற்றப்பட்டு வந்துள்ளன. இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in